அந்த வகையில் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மூங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பிரபாகரன் என்ற இளைஞருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் டிராக்டர் வழங்குவதற்காக வந்திருந்தார். அவருக்கு கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து விவசாயி பிரபாகரனிடம் டிராக்டர் சாவியை கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த டிராக்டரை யாரிடமும் காசு வாங்கிக்கொண்டு இதை தரவில்லை. எனவும், சொந்த பணத்தில் இதை நான் செய்கிறேன். இந்த டிராக்டரை பிரபாகரன் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் மாற்றம் மாற்றம் என்று பேசிக்கொண்டே இருந்தால் போதாது ஒவ்வொரு ஊருக்கும் செல்ல வேண்டும், ஒவ்வொருவரின் கண்ணீரையும் துடைக்க வேண்டும். ஒவ்வொருவரின் பசியை தீர்க்க வேண்டும். அவர்களுக்கு சம்பாதிக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பேசினார்.
இதனைத் தொடர்ந்து கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு உணவு வழங்கிய, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ச்சியை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இளைஞர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக