நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும் IRIS scan செய்யும் பணிக்கான பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 மே, 2024

நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும் IRIS scan செய்யும் பணிக்கான பயிற்சி.


தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த இறுதி முதல் இறுதி வரை கணினிமயமாக்கலின் முன்னோடி செயலாக்கத்தை மேற்கொள்வதற்காக 27.05.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்திரவின்படி,  தருமபுரி வட்டத்தில் 75  நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும், பாலக்கோடு வட்டத்தில்-49 நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும், பென்னாகரம் வட்டத்தில் -77 நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும், காரிமங்கலம் வட்டத்தில் 49 நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும், அரூர் வட்டத்தில் –59 நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும், நல்லம்பள்ளி வட்டத்தில் 42 நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 107  நியாய விலைக் கடை பணியாளர்களும்  மொத்தம் 458 முழுநேர நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும் IRIS scan செய்யும் பணி தொடர்பாக OASYS கணினி ஒருங்கிணைப்பாளரால் (System Integrator) அனைத்து வட்டங்களிலும் பயிற்சி  அளிக்கப்பட்டு  IRIS scanner  மற்றும் புதிய தொழிநுட்பத்துடன் கூடிய POS Machine   வழங்கப்பட்டது.  


இப்பயிற்சி வகுப்பில்  மாவட்ட வருவாய் அலுவலர், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், மண்டல மேலாளர், அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுச் சார் பதிவாளர்கள்   ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad