அயல்நாட்டில் வாழும் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 மே, 2024

அயல்நாட்டில் வாழும் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு.


அயல்நாடுகளில் பணிபுரியும் / கல்வி பயிலும் தமிழர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான விவரங்கள், சென்னை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் 18 முதல் 55 வயதுடைய தமிழர்கள் “அயலகத் தமிழர் நல வாரியத்தில்”  தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம், பதிவுக்குப்பின்,  அடையாள அட்டையின்  மூலம், காப்பீடு திட்டம், கல்வி உதவித் தொகை, திருமண உதவித் திட்டங்களில் அயலகத் தமிழர்கள் பயன் பெறலாம். அயலகத் தமிழர் நல வாரிய வலைதளமான https://nrtamils.tn.gov.in-ல் 15.05.2024 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ள இணைய வழிப் பதிவில், பதிவு கட்டணமாக ரூ.200/-செலுத்தி வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையினை பெறலாம். 


தற்போது உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் விதமாக 15.05.2024 அன்று முதல் 15.08.2024 வரையிலான மூன்று மாதங்களில் பதிவு செய்யும் நபர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.200/ செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. 


திட்டம் குறித்து தகவல் பெற கட்டணமில்லா கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்,

1.18003093793 (இந்தியாவிற்குள்)

2.8069009901 (அயல்நாடுகளிலிருந்து தொடர்புக்கு)

3.806900900 (தவறிய அழைப்பு-missed call)

 மேலும், அயல்நாடுகளுக்கு செல்லும் தமிழர்களுக்கான “முன்பயண புத்தாக்க பயிற்சி மையம் ” செயல்படும் விவரம்

.எண்

மாவட்டங்கள்

தொடர்புக்கு

1.

2.

3.

தஞ்சாவூர்

இராமநாதபுரம்

பெரம்பலூர்

திரு.சந்தானம்,

Dhan Foundation,

+91 8610464077,     +91 9791525231

4.

5.

6.

கன்னியாகுமரி

சிவகங்கை

விழுப்புரம்

Sr.வளர்மதி,

Tamilnadu Domestic Workers Welfare Trust,

+91 9940197583,    +91 8220024967

7.

புதுக்கோட்டை

திருமதி.தெய்வானை,

Sward Solution Manpower Placement Consultancy

+919688520300

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad