TNPSC GROUP I தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 மே, 2024

TNPSC GROUP I தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 90 காலிப்பணியிடங்கள் கொண்ட TNPSC-GROUP-I போட்டித்தேர்விற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். TNPSC-GROUP-I முதனிலை போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தில் தொடங்கப்பட்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இப்பயிற்சி    வகுப்பில்    சேர விருப்பமுள்ளவர்கள்    இந்த  https://t.ly/SQv4h இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இவ்வலுவலக தொலைபேசி எண் 04342–296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இம்மாவட்டத்தில் தகுதி   வாய்ந்த   தேர்வர்கள்   இந்த  இலவச  பயிற்சி  வகுப்பில்  சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad