வருகின்ற 01.07.2024 முதல் 31.07.2024 நடைபெறும் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 ஜூன், 2024

வருகின்ற 01.07.2024 முதல் 31.07.2024 நடைபெறும் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்.


தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற 01.07.2024 முதல் 31.07.2024 நடைபெறும் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்களில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கி, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. தமிழக அரசின் மக்கள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு "தேசிய வைட்டமின்-ஏ சத்து குறைபாட்டு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்" தருமபுரி மாவட்டத்தில் 01.07.2024 முதல் 31.07.2024 வரை நடைபெற உள்ளது. 


இத்திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள சுமார் 1.31 இலட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. வைட்டமின்-ஏ சத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மைக்கும் மிகவும் இன்றியமையாத நுண்சத்து ஆகும்.  மேலும் வைட்டமின்-ஏ சத்து, கண்குருடு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும்.


வைட்டமின்-ஏ திரவம் வழங்குவதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. இத்திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி. அளவும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மி.லி அளவும் வழங்கப்பட உள்ளது.


பொது மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad