மாரண்டள்ளியில் 10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உதவி செவிலியர்களுக்கு யோகா பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 ஜூன், 2024

மாரண்டள்ளியில் 10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உதவி செவிலியர்களுக்கு யோகா பயிற்சி.

மாரண்டள்ளியில் 10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாரண்டஅள்ளி அரசு உதவி செவிலியர் பயிற்சி பள்ளியில் பயிலும் செவிலியர்களுக்கு பல்வேறு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது.


மாரண்டஅள்ளி மகப்பேறு உதவி செவிலியர் பயிற்சி பள்ளியில் வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு தலைமையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பஞ்சப்பள்ளி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரித்திவிராஜ் அவர்களால் தனக்கும்- சமூகத்திற்கும்  யோகா என்ற தலைப்பில் 50க்கும் மேற்பட்ட உதவி செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு வக்ராசனம்,தாடாசனம், நின்ற பாதாசனம், சவாசனம், முத்திரை பயிற்சி, மூச்சுப் பயிற்சி, எளிய வகை தியான பயிற்சி, இயற்கை மருத்துவ குறிப்புகள், ஆரோக்கியம் மற்றும் நினைவுத்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு 10-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. மேலும்  ஒவ்வொரு வாரமும் வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை மாணவிகளுக்கு யோகா பயிற்சி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தாய் சேய் நல அலுவலர்கள்  சுகன்யா, ஜெயந்தி, சின்னப்பொண்ணு, கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad