கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000/- பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 ஜூன், 2024

கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000/- பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற www.puthumaipenn.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டமானது 2022 – 2023  ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப் படிப்பு/ பட்டயப் படிப்பு/ தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வீதம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.


தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேற்படிப்பிற்காக பட்டப் படிப்பு/ பட்டயப் படிப்பு / தொழிற்கல்வி ஆகியவற்றில் சேரும் அனைத்து மாணவியரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகத்தில் புதிய கணக்கு தொடங்கி, உங்கள் கல்லூரியில் நியமிக்கப்பட்ட  புதுமை பெண் திட்ட கல்லூரி நோடல் அலுவலர் (nodal officer) மூலம் (www.puthumaipenn.tn.gov.in) என்ற இணையதளத்தில்  விண்ணப்பிக்க  தெரிவிக்கப்படுகிறது.


மேலும் இத்திட்டதின்  மூலம் குடும்ப  சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளும் தங்கள் கல்வியை தொடரவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு மாவட்ட சமுக நல அலுவலகம் , மாவட்ட ஆட்சியர்  கூடுத்தல்  கட்டிட வளாகம் , தருமபுரி -636705 மற்றும் தொலைபேசி எண்: 04342-233088 தொடர்பு கொள்ளலாம், என தருமபுரி மாவட்ட  ஆட்சித்தலைவர்  திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள்  தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad