இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு குடும்பத்தினர் சார்பில் அபிஷேகங்கள் நடத்திய அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாமி ஊர்வலம் வரும் பொழுது பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும் விழாவின் இறுதி நாளில் காளியம்மன் கோவில் வளாகத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவின்போது பெண்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கையில் 108 பந்தங்கள் ஏந்தி தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.
அப்பொழுது சாமிஎடுத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழா வானவேடிக்கை முழங்க சாமி ஊர்வலம் நடைபெற்றது இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் பாபு(எ)அறிவழகன் செயலாளர் சரவணன் பொருலாளர் சேட்டு துணை தலைவர் மதன் இணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக