இது குறித்து மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் அவர்கள் கூறுகையில், மை தருமபுரி அமைப்பின் மனிஷ் மருத்துவ சேவை திட்டத்தின் சார்பாகவும் பி.அக்ரஹாரம் ஊராட்சி எர்ரபையனஹள்ளி கிராமம் சார்பாகவும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் ஜீன் 16 2024 அன்று காலை எர்ரபையனஹள்ளி அரசு பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனை இருதயம் சார்ந்த பரிசோதனை, சேலம் வள்ளி ஆர்த்தோகேர் எலும்பு சார்ந்த பரிசோதனை, தருமபுரி கவிதா கிளினிக் சார்பாக பொது மருத்துவம், தியா பல் மருத்துவமனை சார்பாக பல் பரிசோதனை, MK மருத்துவமனை சார்பாக இருதயம் பரிசோதனை, வாசன் கண் மருத்துவமனை சார்பாக கண் பரிசோதனை, ரங்கா இரத்த பரிசோதனை நிலையம் சார்பாக இரத்த பரிசோதனை சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் நடைபெற உள்ளது.
இந்த முகாமிற்கு கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு தன்னார்வலப் பணி மேற்கொள்ள உள்ளனர். இந்த முகாமிற்கு சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், என அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக