2024-25 ஆம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர கடன் செயல் திட்டம் (Annual Credit Plan) 2024-25 -க்கான இலக்கு ரூ.15861.14 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 ஜூன், 2024

2024-25 ஆம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர கடன் செயல் திட்டம் (Annual Credit Plan) 2024-25 -க்கான இலக்கு ரூ.15861.14 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசால் 2024-25 ஆம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர கடன் செயல் திட்டம் (Annual Credit Plan) 2024-25 -க்கான இலக்கு ரூ.15861.14 கோடி என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கினை அடைவதற்கான ஆயத்த பணிகள் குறித்து கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தருமபுரி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இன்று  (18.06.2024) நடைபெற்றது.


இக்கூட்டத்தில் ஜூன் 2024 இறுதி வாரத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வங்கியாளர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும், இந்த வங்கியாளர்கள் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு அந்த வட்டாரத்தில் தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதித்து, அதனை ஊக்குவித்து உரிய துறையின் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார். மேலும், காலாண்டுக்கொருமுறை இதுகுறித்த எய்திய சாதனையினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் வங்கியாளர் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.  


இக்கூட்டத்தில்  மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் (பொ) திரு.பிரசன்னா, முன்னோடி வங்கி மேலாளர் (இந்தியன் வங்கி) திரு.ராமஜெயம்,  இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) திரு.குணசேகரன், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர்கள் திரு.சஞ்சீவ்குமார், திரு.முருகேசன், திருமதி.மாலதி, திருமதி.சந்தோஷம், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் திரு.சுப்பையா பாண்டியன், சிட்கோ கிளை மேலாளர் திருமதி.வள்ளியம்மை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad