கல்லூரி இணையதளத்தில் (www.gascpgm.in) தெரிவித்துள்ளவாறு கட்ஆப் மதிப்பெண் மற்றும் தரவரிசை (Rank) அடிப்படையில் மாணாக்கர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்பித்த மாணாக்கர்ளுக்கு கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள்.
கலந்தாய்விற்கு மாணவர்கள் தங்களது பெற்றோருடன் Online மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம். (மாணவர் மற்றும் பெற்றோர் கையொப்பத்துடன்), மாற்றுச் சான்றிதழ் (அசல் TC), 10 th, 11th மற்றும் 12th மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் (3 நகல்களுடன்) மற்றும் புகைப்படம் (5 பிரதி) ஆகியவற்றுடன் கல்லூரி இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள நாட்களில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ) முனைவர் ஜா.பாக்கியமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக