மாரண்ட அள்ளியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்கம் சார்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 ஜூன், 2024

மாரண்ட அள்ளியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்கம் சார்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.


மாரண்டஅள்ளி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கல்வி பெருவிழாவில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்க தலைவரும் திண்டுக்கல் முன்னாள் சேர்மன் நடராஜன் அவர்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் தருமபுரி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஊக்க தொகையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நலிவடைந்த முதியவர்களுக்கு வேட்டி சேலை என ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி  மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் உயர்கல்வி படிக்க போதிய வசதி இல்லாத மாணவர்களுக்காக சிறப்பு உதவிகளை செய்து தர நான் எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் எனவே மாணவர்கள் நன்கு பயின்று ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் விதமாக இருக்க வேண்டும் என சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவரும் தெலுங்கு செட்டியார்கள் சங்கத்தலைவருமான வெங்கடேசன், துணைத் தலைவர் முனிராஜ், அருள்மொழி, சக்திவேல், சென்னகுமார் மற்றும் பாலக்கோடு, பாளையம், குட்லாம் பட்டி, பாவிளி உள்ளிட்ட  ஊரைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad