தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தின் முன்பு பாரத பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்பதை முன்னிட்டு பாஜக நகர தலைவர் ஆர்.கே.கணேசன் தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்ததும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா மற்றும் மாவட்ட மகளிர் அணி தலைவி சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகர பொது செயலாளர்கள் தண்டபாணி, முனிராஜ். நிர்வாகிகள் பெரியண்ணன், ராமரு, மாதேஷ், ஐயப்பன், சசிகுமார், அன்பரசு, நந்தகிரி, கார்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக