தருமபுரி‌ மாவட்டம் பாலக்கோட்டில் தென்னிந்திய அளவிலான 3 நாள் ஹாக்கி போட்டியில் பாலக்கோடு அணி முதல் பரிசை வென்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 ஜூன், 2024

தருமபுரி‌ மாவட்டம் பாலக்கோட்டில் தென்னிந்திய அளவிலான 3 நாள் ஹாக்கி போட்டியில் பாலக்கோடு அணி முதல் பரிசை வென்றது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தென்னிந்திய அளவிலான 3 நாள் ஹாக்கி போட்டி கடந்த 15ம் தேதி தொடங்கி திங்கட்கிழமை நிறைவு பெற்றது. இப்போட்டியினை  முன்னாள் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பிணர் கொ.மாதப்பன் அவர்கள் தலைமை, தாங்கி  தொடங்கி வைத்தார்.

இப்போட்டிக்கு தலைமைஆசிரியர் லட்சுமணன், உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இப்போட்டியானது மாநில நல்லாசிரியர் விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன் மேற்பார்வையில் நடைப்பெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆகிய மாநிலங்களை சேர்ந்த 18 அணிகளை சேர்ந்த ஹாக்கி வீரர்கள்  கலந்து கொண்டனர்.

இன்று 17ம் தேதி திங்கட்கிழமை நடைப்பெற்ற இறுதி போட்டியில் தமிழ்நாடுசார்பாக பாலக்கோடு அணியும், பாண்டிச்சேரி அணியும் மோதின. போட்டி முடிவில் 4க்கு 5 என்ற கோல் கணக்கில் வித்தியாசத்தில் தமிழ்நாடு சார்பாக விளையாடிய பாலக்கோடு அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. பாண்டிச்சேரி அணி 2 ம் இடத்தை பிடித்தது. 3ம் இடத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நாகரசம்பட்டி அணியும், 4ம் இடத்தினை சென்னை அணியும் பெற்றனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலக்கோடு முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், தொழிலதிபர் கே.வி.ரங்கநாதன், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, பேளாரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கே.மாரியப்பன், பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், ஒய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் மாரியப்பன், சரவணன், முனியப்பன், ரமேஷ், பச்சியப்பன், ஆகியோர் சுழல் கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad