பாலக்கோடு அருகே கிணற்றை தூர்வாரும்போது 50 அடி ஆழ கிணற்றில் கிரேன் கவிழ்ந்து விழுந்ததில் விவசாயி பலி- ஒருவர் கவலைக்கிடம்-போலீசார் விசாரணை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 ஜூன், 2024

பாலக்கோடு அருகே கிணற்றை தூர்வாரும்போது 50 அடி ஆழ கிணற்றில் கிரேன் கவிழ்ந்து விழுந்ததில் விவசாயி பலி- ஒருவர் கவலைக்கிடம்-போலீசார் விசாரணை.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எலங்காளப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வம் (48) இவருடைய  விவசாய நிலத்திலிருந்த 50 அடி ஆழமான பழைய கிணற்றை தூர்வாரும் பணி நேற்று காலை முதல் நடைப்பெற்று வந்தது. 

இன்று மாலை சுமார் 4 மணி அளவில் தூர் வாரிக் கொண்டிருக்கும் போது எதிர்பாரத விதமாக கிணற்றின் மேலே பொறுத்தப்பட்டிருந்த கிரேன் பாரம் தாங்காமல்  கிணற்றுக்குள் விழுந்ததில், கிணற்றிலிருந்த நில உரிமையாளர் விவசாயி செல்வம் (45), கிணறு வெட்டும் தொழிலாளி குமார் (வயது. 22) முதலிட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கிரேன் உரிமையாளர் சின்னசாமி(67) ஆகிய மூவரும் கிரேனுக்கு அடியில் சிக்கி கொண்டனர்.


இச்சம்பவம் குறித்து அப்பகுதியினர் பாலக்கோடு தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர், தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்க்கு வந்து   கிணற்றின் உள்ளே கிரேனுக்கு அடியில் சிக்கி இருந்த குமார், சின்னசாமி இருவரையும் உயிருடன் மீட்டனர். நில உ.ரிமையாளர் செல்வம் உடல் நசுங்கி சம்பப இடத்திலேயே உயிரிழந்து தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் கிரேன் உரிமையாளர் சின்னசாமியும்  பலத்த காயமடைந்தார் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குமார் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன்  உயிர் தப்பினார். இச்சசம்பவம் குறித்து பாலக்கோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்  மக்களிைடேய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad