தருமபுரி அரசு கலைக்கல்லூரி தேர்வு மையம், இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி அரசு கலைக்கல்லூரி தேர்வு மையம், இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (09.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி -4-ல் (Group-IV) அடங்கியுள்ள பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு தருமபுரி மற்றும் அரூர் கோட்டங்களில் மொத்தம் 228 இடங்களில் அமைக்கப்பட்ட 228 தேர்வு மையங்களில் இன்றைய தினம் (09.06.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 வரை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 62,630 நபர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு, இதில் 51,203 தேர்வர்கள் (81.75%) இன்று இத்தேர்வினை எழுதி உள்ளனர். இத்தேர்விற்க்கு 11,427 நபர்கள் (18.25%) தேர்வு எழுத வருகை தர வில்லை. தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு 228 முதன்மை கண்காணிப்பாளர்களும், 228 ஆய்வு அலுவலர்களும், 228 வீடியோ ஒளிப்பதிவாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
மேலும் இத்தேர்வினை கண்காணிப்பதற்கு துணை ஆட்சியர் நிலையிலான 9 பறக்கும் படை குழுக்களும், 7 வட்டங்களிலும் நடைபெற்ற இத்தேர்வினை கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் நிலையிலான தலா 7 கண்காணிப்பு அலுவலர்களும், சுமார் 300-க்கும் மேற்பட்டுள்ள காவல் துறையினரும் இத்தேர்விற்கான பாதுகாப்பு பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வு நடைபெற்ற அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், இத்தேர்விற்காக சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி - 4-ல் (Group-IV) அடங்கியுள்ள பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடைபெற்ற தருமபுரி அரசு கலைக்கல்லூரி தேர்வு மையம், இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் தேர்வு மையங்களில் இத்தேர்வு எழுதுவதற்கு மேற்கொள்ளப்பட்டிருந்த வசதிகள், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததோடு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டுமென இத்தேர்வு பணிகளில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திருமதி.பார்வதி உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக