மாரண்டஅள்ளி அருகே கறவை மாடுகளை திருடி சென்ற 6 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 ஜூன், 2024

மாரண்டஅள்ளி அருகே கறவை மாடுகளை திருடி சென்ற 6 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பன்னிஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி அங்கப்பன் (வயது.72) இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 14ம் தேதி இரவு 7 மணிக்கு தனது விவசாய நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் தலா 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள  தனது 2 கறவை மாடுகளை கட்டி விட்டு வீட்டிற்க்கு சென்றார். அடுத்த நாள் காலை சென்று பார்த்த போது 2 கறவை மாடுகளும் மர்ம நபர்கள்  திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து  அங்கப்பன் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார்.


இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் சந்தேகத்தின் பேரில் மாரண்டஅள்ளி அடுத்த சந்திராபுரத்தை சேர்ந்த முரளிதாஷ் (வயது.22) வெலாங்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது. 24) அஜீத் (வயது. 23) கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அடுத்த சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த தனுஷ் (வயது. 25) முருகேசன் (வயது 44) பாலநாயக்கனஅள்ளியை சேர்ந்த சேட்டு (வயது. 26) ஆகிய 6 பேரையும் பிடித்து விசாரித்ததில், 6 பேரும் கூட்டாக சேர்ந்து மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட  பகுதிகளில் இரவு நேரங்களில் மினி சரக்கு வாகனத்தின் மூலம் கறவை மாடுகளை திருடி சென்று வெளியூர் சந்தைகளில் விற்று வந்தது தெரிய வந்தது.


ஆறு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 2 கறவை மாடுகளையும் பறிமுதல் செய்து குற்றவாளிகள் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து  பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad