மை தருமபுரி அமரர் சேவை மூலம் 96 ஆவது ஆதரவற்ற உடல் நல்லடக்கம் செய்தனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 ஜூன், 2024

மை தருமபுரி அமரர் சேவை மூலம் 96 ஆவது ஆதரவற்ற உடல் நல்லடக்கம் செய்தனர்.

நல்லானஅள்ளி கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள், இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் இது குறித்து கூறுகையில், மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த புனித உடல்களை தருமபுரி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்து வருகிறோம். அதன்படி தருமபுரி மதிகோன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நல்லானஅள்ளி கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார், இவரைப் பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை என தெரியவந்தது. 


இறந்த இவரது உடலை தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து மதிகோன்பாளையம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜு, மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், சண்முகம், முஹம்மத் ஜாபர், மதிவாணன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் 96 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம். ஆதரவற்று இறந்தவர்களுக்கு உறவாய் இருந்து புனித உடலை நல்லடக்கம் செய்யும் பணி மனிதநேயத்துடன் செய்து வருகிறோம், மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம், என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad