நேரு யுவ கேந்திரா கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 ஜூன், 2024

நேரு யுவ கேந்திரா கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா.


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா தருமபுரி சந்திரா ஹாலில் நேரு யுவ கேந்திராவின் துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற வேல்முருகன் அவர்களை வாழ்த்தி பேசினர். 

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் நேரு யுவ கேந்திராவின் துணை இயக்குநர் சுந்தரமகாலிங்கம், சேலம் மாவட்ட நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் ட்ரவீன் சார்லஸ்டன், அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பாலமுருகன், பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கில துறை தலைவர் முனைவர் கோவிந்தராஜ், சின்னபள்ளத்தூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி, கிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, தொழில் அதிபர் சந்தோஷ் சிவா, முன்னாள் தேசிய இளைஞர் தொண்டர் ஞானராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத்குமார் வரவேற்றுப் பேசினார். 


மேலும் நேரு யுவ கேந்திரா தென்மண்டல அலுவலக கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் ரவி, கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் திட்ட உதவியாளர் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியில் தேசிய இளைஞர் தொண்டர்கள், முன்னாள் தேசிய இளைஞர் தொண்டர்களான பிறைசூடன், சந்துரு, கபில் தேவ் மற்றும் நேரு யுவ கேந்திராவின் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இறுதியாக ஏற்புரையினை பணி நிறைவு பெற்ற வேல்முருகன்  வழங்கினார். தவிர தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி கே சாந்தி இ ஆ ப அவர்கள் அலுவலகத்தில் பணிநிறைவு பெற்ற வேல்முருகன் அவர்களை சால்வை அணிவித்து புத்தகம் மற்றும் வாழ்த்து செய்தி வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad