மாரண்டஅள்ளி அடுத்த பாறைக் கொட்டாய் கிராமத்தில் வயிற்று வலி தாங்காமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஜூன், 2024

மாரண்டஅள்ளி அடுத்த பாறைக் கொட்டாய் கிராமத்தில் வயிற்று வலி தாங்காமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பாறைக் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முதியவர் மணி (வயது.70) லாரி டிரைவரான இவர் கடந்த 5 வருடங்களாக ஒரு பக்கம் கை, கால்களில் வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

மேலும் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தவர், நேற்று முன்தினம் மாலை வயிற்று வலி தாங்க முடியாமல் பூச்சி கொல்லி மருந்து குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை குடும்பத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதியவர் மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad