காவல்துறை சார்பில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே தொடங்கி சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 ஜூன், 2024

காவல்துறை சார்பில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே தொடங்கி சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் இன்று அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே காவல்துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் கொடியைத்து துவக்கி வைத்தார் இந்த பேரணியானது தற்காலிக பேருந்து நிலையம் வழியாக முள்ளுவாடி பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் கடைவீதி வட்டாட்சியர் அலுவலகம் காவல் நிலையம் போடூர் நான்கு சாலை வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை இப்பேரணி முடிவடைந்தது இதில் போதை ஒழிப்போம் ஒன்று கூடி வாருங்கள், போதையை ஒழிப்போம் வாழ்வில் ஜெயிப்போம், போதை தன்னிலை மறக்க தானே வலியை தேடும் சம்பவம், புத்தியை கெடுக்கும் போதையை ஒழிப்பீர், நித்தமும் சேரும் நிம்மதி பெறுவீர், போதை அது சாவின் பாதை, போதையில் நீ வீதியில் உன் குடும்பம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி 1200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முருகன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாதப்பன் பென்னாகரம் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் பள்ளி தாளாளர்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad