பாலக்கோடு, தாசில்தார் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கு நிலம் அளவீடு செய்து தர பொதுமக்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 ஜூன், 2024

பாலக்கோடு, தாசில்தார் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கு நிலம் அளவீடு செய்து தர பொதுமக்கள் கோரிக்கை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் கூலி தொழில் செய்து வருகின்றார். சொந்த வீடு இன்றி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீடு கட்டி கொள்ள தமிழக அரசு  சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு பாலக்கோடு அருகே கூசுக்கல் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

ஆனால் பட்டா வழங்கி இடத்தை இதுவரை அளவீடு செய்து வழங்காததால், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலக்கோடு தாசில்தாரிடம், குடி இருக்க இடமில்லை, வீட்டுவாடகை கட்ட முடியவில்லை, எனவே  பட்டா இடத்தை அளந்து வழங்குமாறு கேட்டனர். இதையடுத்து சர்வேயர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட தாசில்தார் ஆறுமுகம்,  இலவச வீட்டுமனைபட்டா வழங்கிய இடத்தை  உடனடியாக அளந்து தரநடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் திரும்பி சென்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad