பென்னாகரத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இசுலாமியர்கள் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 ஜூன், 2024

பென்னாகரத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இசுலாமியர்கள்


இசுலாமியர்கள் பென்னாகரத்தில் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையான இன்று ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பெண்ணாகரம் ஒகேனக்கல் சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் தொழுகையில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் இஸ்லாமியர்களுக்கான  பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜாமியா மஸ்ஜித் சுன்னத் முத்தவல்லி பி எம் தவுலத் பாஷா தலைமையில் ஈத்கா மைதானத்தில் இறைத்தூதரான இஸ்மாயில் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


மேலும் குர்பானி கறி கொடுக்க இயலாத ஏழை எளிய இஸ்லாமியர்களுக்கு குருபானி கொடுக்கும் நாள் பக்ரீத் திருநாளாகும். மேலும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறைவன் இப்ராகிம் நபியின் கனவில் மகனான இஸ்மாயில் பலி கொடுக்க வேண்டும் என கனவு கண்டார் அதனை நிறைவேற்றும் வகையில் அவர் இஸ்மாயில் இடம் கனவைப் பற்றி தெரிவித்தார். 


இஸ்மாயில் சம்மதித்து தயாராக இருந்த நிலையில் இப்ராஹிம் இறைவன் மீது நம்பிக்கையை கண்டு இறைவன் தடுத்து நிறுத்தி மகனுக்கு பதிலாக ஆட்டை பலி கொடுக்குமாறு செய்தார் இந்த நாள் தான் பக்ரீத் தினமாக இஸ்லாமிய மக்கள் கொண்டாடப்படுகிறது.


பக்ரீத் பண்டிகையில் இஸ்லாமியர்கள் அதிகாலை முதலே புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை முடிந்தவுடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கட்டிப்பிடித்து தழுவி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad