தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவது குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 ஜூன், 2024

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவது குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவது குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவது குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் அவர்கள் தலைமையில் இன்று (12.06.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் அவர்கள் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவது குறித்த உறுதிமொழியான "இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன்.” என்ற உறுதிமொழியினை வாசிக்க அரசுத்துறை அலுவலர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதின் இப்ராகிம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரு.அருண்மொழித்தேவன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad