பரிசல் சவாரி டென்டரை தங்களுக்கே வழங்க வேண்டும் பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம் போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல் ஏமாற்றம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 ஜூன், 2024

பரிசல் சவாரி டென்டரை தங்களுக்கே வழங்க வேண்டும் பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம் போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல் ஏமாற்றம்.


ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள பரிசல் சவாரி செய்வதற்கான டெண்டர் நேற்றுமாவட்ட நிர்வாகத்தால் ஏலம் அறிவிக்கப்பட்டு இந்த ஏலமானது, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று  ஏலம் விடப்பட்ட நிலையில் ரூபாய் ஒரு கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் ஏலம் போனது.

ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டுவதற்காக 400 பரிசல் ஓட்டும் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் பரிசல் துறை டெண்டரை கடந்த ஆண்டு பரிசல் ஓடிகளே எடுத்திருந்த நிலையில் கடந்த ஆண்டு தண்ணீர் வரத்து அதிகரிப்பாலும்,தமிழக சுற்றுலா துறை மூலம் பரிசல் துறை |18கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணி நடைபெருவதால்  போதிய வருவாய் இன்றி நஷ்டம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். 


எனவே இந்த ஆண்டு பரிசல் துறை டெண்டர்   பரிசல் ஓட்டிகளாகிய தங்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்ததாகவும் ஆனால் இந்த டெண்டர் தங்களுக்கு வழங்கப்படாமல் தணியாருக்கு வழங்கியதை கண்டித்தும் இன்று ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் ஓட்டிகள் பரிசலை ஓட்டாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



 கடந்த ஆண்டிற்கான டெண்டர் முடியும் நிலையில் இங்குள்ள பரிசல் ஓட்டிகள் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் கூடுதலாக கால அவகாசம் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் தங்களின் கோரிக்கையை செவி சாய்க்காத மாவட்ட நிர்வாகம் தற்போது வேறு ஒருவருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த ஆண்டிற்கான டெண்டரையும் தங்களுக்கே வழங்க வேண்டும் என பரிசல் ஓட்டிகள் வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad