சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் மருத்துவ துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியானது தலைமை மருத்துவமனை துவங்கி நெடுஞ்சாலை துறை அலுவலகம் வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வரை குழந்தை திருமணத்தை ஒழிப்போம், பெண் சிசுக்கொலை தடுப்போம், பெண் கல்வி சமுதாய முன்னேற்றம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் பேரணியாக சென்றனர். இந்தப் பேரணி முடிவில் சுற்றுச்சூழல் குறித்து மரக்கன்றுகள் ஏந்தியும் நெகிழிப்பை பயன்படுத்தாதவாறு மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இப்பேரணியில் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் கனிமொழி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் மருத்துவ துறை பணியாளர்கள் காவல்துறையினர் என ஏராளமானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக