மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் உலக போதைப் பொருட்கள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 ஜூன், 2024

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் உலக போதைப் பொருட்கள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.


நல்லானூர், அருகேயுள்ள மருதம் நெல்லி கல்விக் குழுமம், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து உலக போதைப் பொருட்கள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.



இந்நிகழ்வில் மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.பரஞ்சோதி முன்னிலை வகித்தார். போதைப் பொருட்களால் ஏற்படும் தீங்கினை பற்றியும், அதனால் ஏற்படும் உடல் பாதிப்பினை பற்றியும் மாணவர்களிடம் எடுத்துத்துரைக்கப்பட்டது. நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் இரா.சதீஸ்குமார்ராஜா, மற்றும் பா.பெருமாள் உள்ளிட்டோர் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad