தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் - மாவட்ட ஆட்சியர் அறிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 ஜூன், 2024

தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் - மாவட்ட ஆட்சியர் அறிக்கை.


தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை  ஏற்பாடுகள் மற்றும் பொதுவாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் 

  1. அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைக்கலாம்.
  2. அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும்.  
  3. மழைநீர் வடிந்த பின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரமிட்டு மண் அனைக்க வேண்டும். மேலும் இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவர்த்தி செய்யலாம்.
  4. காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டுக் கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.  
  5. தோட்டக்கலை பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர்காப்பீடு செய்ய வேண்டும்.  


பசுமைக்குடில்

  1. பசுமைக்குடில் அமைத்துள்ளவர்கள் அதன் அடிபாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும்.   
  2. பசுமைக்குடில் கதவுகள் மற்றும் சன்னல்கள் பத்திரமாக மூடிஉள்ள பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும்.  
  3. பசுமைக்குடிலின் அருகில் மரங்கள்  இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்யவும்.  


நிழல்வலைக்குடில்

  1. நிழல்வலைக்குடில் அமைத்துள்ள விவசாயிகள் கிழிந்து போன நிழல்வலைகளை தைத்து சரிசெய்ய வேண்டும்.   நிழல்வலைக்குடிலின் அடிபாகம் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளது உறுதி செய்ய வேண்டும்.  


பல்லாண்டுப் பயிர்கள்


மா மற்றும் கொய்யா

  1. மா மற்றும் கொய்யா பயிரிட்டுள்ள விவசாயிகள் மரங்களில் உள்ள காய்ந்த பட்டுப் போனகிளைகளை அகற்றிட வேண்டும். 
  2. நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.  மரத்தின் அடிப் பகுதியில் மண் அனைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும்.  தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்ய வேண்டும்.    
  3. நோய் தடுப்பு மருந்துகளை மரத்தின் துhர் பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும்.  
  4. இளஞ்செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கி குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும்.  
  5. கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களின் பாதிப்பு இருப்பின் உடனடியான வேர் பகுதியை சுற்றி மண் அனைக்க வேண்டும்.  
  6. பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களுக்கு தேவையான தொழு உரம் இட வேண்டும்.  


வருடாந்திரபயிர்கள்

வாழை

  1. வாழை மரங்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ் இலைகளை அகற்றி விட்டு மரத்தின் அடியில் மண் அனைக்க வேண்டும்.  சவுக்கு அல்லது யூக்கலிப்டஸ் கம்புளை ஊன்றி கோலாக பயன்படுத்தலாம்.  
  2. மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும்.  வாழை தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும் 75 சதவிகிதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்திட வேண்டும்.  


காய்கறிகள் மற்றும் பூக்கள்

  1. உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும்.  
  2. நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும்.
  3. டிரைகோடெர்மா விரிடி பூஞ்சான உயிரியல் கொல்லியினை நிலத்தில் தெளிக்க வேண்டும்.
  4. சூடோமோனாஸ்  பூஞ்சான உயிரியல் கொல்லியினை இலையில் தெளிக்க வேண்டும்.
  5. காய்ந்துப் போன இலைகளை அகற்றிட வேண்டும்.
என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad