பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 ஜூன், 2024

பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சியர்.


தமிழ்நாடு அரசு - பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள்‌ - விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன, தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி, ௫.ஆ.ப., அவர்கள்‌ தகவல்‌.

சுதந்திர தின விழாவின்‌ போது பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள்‌ தமிழ்நாடு அரசால்‌: ஒவ்வொரு ஆண்டும்‌ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த சமூக சேவகருக்கு ரூ . 50,000/- ரொக்கப்பரிசு (ம) சான்று வழங்கப்படும்‌. சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.4,00,000/- ரொக்கப்பரிசு (ம) சான்று வழங்கப்படும்‌.


இதனை தொடர்ந்து 2024-ஆம்‌ ஆண்டு சுதந்திர தின விழாவின்‌ போது, சிறந்த சமூக சேவகர்‌ (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள்‌ வழங்கப்பட உள்ளதால்‌, இவ்விருதிக்கான விண்ணப்ப விவரங்கள்‌ அனைத்தும்‌ 21.05.2024- முதல்‌ தமிழ்நாடு அரசின்‌ விருதுகள்‌ இணையத்தளத்தில்‌ (https://awards.tn.gov.in) பதிவேற்றம்‌ செய்யப்பட்டு உள்ளது.


சிறந்த சமூக சேவகர்‌ (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள்‌ பெற இணையத்தளத்தில்‌ மூலம்‌ விண்ணபிக்க வேண்டியவர்களின்‌ தகுதிகள்‌ : தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும்‌, 18 வயதிற்கு மேற்பட்டவரகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. குறைந்த பட்சம்‌ 5 ஆண்டுகள்‌ சமூக நலன்‌ சார்ந்த நடவடிக்கைகள்‌, பெண்‌ குலத்திற்கு பெருமை சேர்க்கும்‌ வகையில்‌ மொழி, இனம்‌, பண்பாடு, கலை, அறிவியல்‌, நிர்வாகம்‌ போன்ற துறைகளில்‌ மேன்மையாக பணிபுரிந்து, மகளிர்‌ நலனுக்காக தொண்டாற்றும்‌ வகையில்‌ தொடர்ந்து பணியாற்றும்‌ சமூக சேவகர்‌ (ம) தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்‌ அரசு அங்கீகார நிறுவனமாக இருத்தல்‌ வேண்டும்‌,


இணையத்தில்‌ விண்ணப்பித்தவர்கள்‌ சம்மந்தப்பட்ட மாவட்ட    சமூக நல அலுவலகத்தில்‌ நேரில்‌ சென்று ஒப்படைக்க வேண்டியவை: விண்ணபத்தாரரின்‌ கருத்துரு (8௦௦4-4) தமிழ்‌-2, ஆங்கிலம்‌ -2 புத்தக வடிவத்தில்‌ தயாரிக்கப்பட்டு, புகைப்படத்துடன்‌ மாவட்ட சமூக நல அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌. ஒரு பக்கம்‌ தணியரை பற்றிய விவரம்‌ - தமிழ்‌ (மருதம்‌ எழுத்துருவில்‌ ) மற்றும்‌ ஆங்கிலம்‌ (Soft Copy & Hard Copy). இணைப்பு - படிவம்‌ | & II தமிழ்‌, (மருதம்‌ எழுத்துருவில்‌) மற்றும்‌ ஆங்கிலம்‌ முழுவதுமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்‌. (Soft Copy & Hard Copy). எனவே, தருமபுரி மாவட்டத்தில்‌ பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ (ம) தொண்டு நிறுவனங்கள்‌, இணையத்தளத்தின்‌ மூலம்‌ வருகின்ற 20.06.2024-குள்‌  கருத்துருக்களை சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது, என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி.இ.ஆ.ப. அவர்கள்‌ தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்‌.

கருத்துகள் இல்லை:

Post Top Ad