தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, பி.டி.ஓ.ஆபிஸ் கூட்டரங்கில் சத்துணவு சமூக தணிக்கை வழிநடத்தும் குழுவினருக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு வட்டார வள அலுவலர் சுதா தலைமையில் நடந்தது.
இப்பயிற்சி வகுப்பிற்கக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், விமலன், துனை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரக பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு போதிய அளவில் தரமானதாக உள்ளதா என தனிக்கை வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. எனவே இக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
இப்பயிற்சி வகுப்பில் சமையற்கூடம் தூய்மையாக பராமரிப்பது, குடிநீர், மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் தண்ணீரின் தூய்மை குறித்தும், உணவு பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் சுத்தமாகவும், தரமானதாகவும் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்துவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் சமூக தணிக்கை வழிநடத்தும் குழுவினர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக