முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே திருப்பள்ளியெழுச்சி, மங்களஇசை, திருச்சுற்றுக் கலசநீராட்டு, ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் காலவேள்வி, பேரொளி வழிபாட்டுடன் பூர்ணாஹதி நடந்தது.
இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை ஊர்கவுண்டர்கள், மந்திரிகவுண்டர்கள், கோல்காரர்கள், 12 ஊர் கோம்புகவுண்டர்கள், மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள் யாகசாலையில் இருந்து புனித நீர் கலசத்தை தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் உச்சியில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினார்.
பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீ ஊர் மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபெருமாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக