தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர். இன்று சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பாலக்கோடு தாசில்தார் அலுவலக வளாகத்தில் போதை ஒழிப்பு குறித்த உறுதி மொழியை தாசில்தார் வாசிக்க அதனை பின்பற்றி அலுவலர்கள் உறுதி மொழி ஏற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தனி தாசில்தார் ரேவதி, துணை தாசில்தார் ஜெகதீசன், வட்ட வழங்கல் அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக