உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்து, உறுதிமொழி ஏற்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 5 ஜூன், 2024

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்து, உறுதிமொழி ஏற்கப்பட்டது.


தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திடல் வளாகத்தில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்து, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திடல் வளாகத்தில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.06.2024) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்து, உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் வெயிலின் தாக்கமும், திடீரென்று பொழியும் பேய் மழையும், மழைக்காலங்களில் வறட்சியும் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை நமக்கு உணர்த்துகின்றன. 


ஆனால் மனித இனம் இப்பிரச்சனையின் முக்கியத்துவம் உணராமல் கடந்து செல்கின்றது. சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப்பார்த்து இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வுகாண்பது குறித்து, சிந்தித்து செயலாற்றுவதற்கன நாளாகவே உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 5ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான கருப்பொருள்: நில மறுசீரமைப்பு பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மை உலக சுற்றுச்சூழல் தினத்தினை கொண்டாடும் விதமாக தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்றைய தினம்  சுமார் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.


வரும் கால சந்ததியினருக்கு வாழத்தகுதியான சுற்றுச்சூழலை விட்டுச்செல்வது நம்கடமை எனக்கருதி நெகிழி தவிர்த்தல், மரம் வளர்த்தல், மழைநீர் சேமித்தல், பொதுவாகனங்களை பயன்படுத்துதல் போன்ற சிறுசிறு மாற்றங்களை கடைபிடித்து சுற்றுச்சூழலை மேம்படுத்துவோம் என இவ்வுலக சுற்றுச்சூழல் தினத்தில் உறுதியேற்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் உதவிப்பொறியாளர் அவர்களால் வானொலி மூலம் உரைநிகழ்த்தப்பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழிற்சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.


முன்னதாக தி/ள் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் தொழிற்சாலையில் திருமதி.ஆ.நித்யலட்சுமி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அவர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டு பணியாளர்களுக்கிடையே சுற்றுச்சூழல் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திருமதி.ஆ.நித்யலட்சுமி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad