பாலக்கோட்டில் காவல் துறை சார்பில் கஞ்சா மற்றும் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 ஜூன், 2024

பாலக்கோட்டில் காவல் துறை சார்பில் கஞ்சா மற்றும் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.


தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் வரும் ஜூன் 26-ம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு   போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி டி.எஸ்.பி சிந்து தலைமையில் நடைப்பெற்றது.


இப்பேரணியை தாசில்தார் அலுவலகம் முன்பிருந்து  பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது தாசில்தார் அலுவலகம் முன்பிருந்து தொடங்கி கடைவீதி, எம்.ஜிரோடு, பேருந்து நிலையம், ஸ்தூபி மைதானம் வழியாக காந்தி சிலையை வந்தடைந்தது.


இதில் 100க்கும் மேற்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், போலீசார், கலந்து கொண்டு போதை பழக்கத்திற்க்கு எதிராக கோஷமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக சென்றனர். டி.எஸ்.பி. சிந்து பேசுகையில் போதைப் பழக்கம் அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் காரணமாகிறது. கொலை, கொள்ளை, பாலியல் குற்றம், குடும்ப பிரச்சனை  உள்ளிட்டவைகளின் பின்னனியில் போதைப் பழக்கம் முக்கிய காரனமாக உள்ளது. 


மேலும் இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைக்காமல் தடுப்பதற்காக, காவல் அதிகாரிகள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 


மேலும் கஞ்சா, கள்ள சாராயம் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பது குறித்து தெரிய வந்தால் பொதுமக்கள் உடனடியாக 9600888166 என்ற தொலைபேசி எண்ணிற்க்கு தகவல் தெரிவிக்குமாறும் தகவல் அளிப்பவர் குறித்த இரகசியம் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.


இப்பேரணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் கோகுல், பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் ரவி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன், போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad