கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவர்களை இப்பள்ளியின் தாளாளர் எவரெஸ்ட் இரா.முனிரத்தினம் வரவேற்றார்.
தருமபுரி மாவட்டம் கடத்தூரில் இயங்கி வரும் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிரீன் பார்க் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ சீனியர் ஸ்கூல் கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் சிறப்பான கல்வியை வழங்கி வருகிறது. இப்பள்ளி கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்பட்டது.
முதல் நாளில் ஆர்வமுடன் வருகை தந்த மாணவ, மாணவிகளையும், புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவ, மாணவிகளையும் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் எவரெஸ்ட் இரா. முனிரத்தினம் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். உடன் இப்பள்ளியின் நிர்வாக அலுவலர் எம்.ராஜா, முதல்வர்கள் ஜெகதீசன், சதானந்தம் மற்றும் ஆசிரியர்கள் உரிய அறிவுரைகள் வழங்கி மாணவ, மாணவிகளை வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக