பாலக்கோடு பகுதிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 ஜூன், 2024

பாலக்கோடு பகுதிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம்  பெலமாரனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாயி இராஜேந்திரன் அவர்களுக்கு சொந்தமான  விவசாய நிலத்தில் சந்தனம்,மகாகனி, தேக்கு போன்ற விலை மதிப்புள்ள 3000 டிம்பர் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. 

தருமபுரி மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு 2,75,000 மரக்கன்றுகள் நடுவதற்கு இந்த காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு தற்பொழுது பெய்து வரும் பருவ மழையை வாய்ப்பாக பயன்படுத்தி  தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் உள்ளிட்ட மரங்களை நடவு செய்து விவசாயிகள் பயனடையலாம் எனவும் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை அலுவலகங்களை தொடர்பு கொண்டு காவிரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் மரம் தேவைப்படுவோர் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad