மாரண்டஅள்ளியில் அறிவு திருக்கோயில் சார்பில் காயகல்ப பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 ஜூன், 2024

மாரண்டஅள்ளியில் அறிவு திருக்கோயில் சார்பில் காயகல்ப பயிற்சி.


மாரண்டஅள்ளி அறிவு திருக்கோயில் யோகா பயிற்சி மையத்தில் ஆழியாறு அறிவு திருக்கோயில் சார்பில் மூத்த யோகா பேராசிரியை திருமதி சுமதி சுப்பிரமணியன் அவர்கள்  நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய கல்ப பயிற்சியினை வழங்கினார்.


மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காயகல்ப பயிற்சி செய்வதனால் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மனதை ஒருநிலைப்படுத்துதல், உள்ளிட்ட பயிற்சிகளை செய்யும் பொழுது நரம்பு மண்டலம் வலுப்பெற்று உடல் உறுதி பெறுவதுடன் ஆஸ்துமா, நீரிழிவு, மூலநோய் உள்ளிட்ட நோய்களிலிருந்து விடுபட இப்பயிற்சி உதவும் எனவும் கூறினார். 

மேலும் நிகழ்ச்சியில் ஓசூர் மண்டல தலைவர் ராஜி முன்னிலை வகித்தார். பொறுப்பாளர்கள் வெங்கடேசன் ,ஜெய் சக்தி, விஜயா, சின்னசாமி,  மாரண்ட அள்ளி நிர்வாகிகள் ரங்கராஜ் தலைவர் சாரதா, ஜெயந்தி, குமரவேல், பவானி, சிவகாமி, துரை,  சிறப்பு விருந்தினர்களாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காயகல்ப பயிற்சி வழங்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad