தருமபுரி ரயில் நிலையத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தண்டவாளத்தில் மயக்க நிலையில் இருந்துள்ளார். இவரை மீட்ட ரயில்வே காவல்துறையினர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அவரைப் பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டு தருமபுரி ரயில் நிலையம் அருகே சுற்றி வந்துள்ளார் என தெரிய வந்தது.
இந்நிலையில் தருமபுரி ரயில் நிலைய காவலர் சரத்குமார், மை தருமபுரி தமிழ்செல்வன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி புனித உடலை நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 92 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக