பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பாலக்கோடு பிர்கா விற்க்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 ஜூன், 2024

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பாலக்கோடு பிர்கா விற்க்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார்  அலுவலகத்தில் பாலக்கோடு பிர்காவிற்க்கான பசலி 1433-ம் வருவாய் தீர்வாயம், ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸி ராஜ்குமார் அவர்கள் தலைமையில்  நடைப்பெற்றது.


பொதுமக்களிடமிருந்து கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, மீட்பது, இலவச வீட்டுமனைபட்டா,  பட்டா பெயர் மாற்றம், உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டவர், கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரித்து வரும் பதிவேடுகள், நில அளவு  உபகரணங்கள், கிராம கணக்குகள்  மற்றும் வருவாய்த் துறையினுடைய ஆவணங்களை ஆய்வு செய்தார்.


இந்த நிகழ்ச்சியில்  பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் அன்பு, தனி வட்டாட்சியர் ரேவதி,  மற்றும் துணை வட்டாட்சியர் ஜெகதீசன்,  வட்ட வழங்கல் அலுவலர் பழனி, நிலஅளவு பிரிவு அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பிறதுறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad