கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் திரளாக பங்கேற்க வேண்டும் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அறிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 ஜூன், 2024

கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் திரளாக பங்கேற்க வேண்டும் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அறிக்கை.

தருமபுரி மாவட்ட மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி .பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சீர்மிகுவெற்றிக்கு வழிநடத்தி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் வரும் 15ம் தேதி  சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.

முதல்வர் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த பிரசார பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் வார்டு கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள்  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் சார்பு அணி மற்றும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் ஆகிய ஆண்களின் நிர்வாகிகள் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் முன்னோடிகள் விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad