தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பெலமாரனஅள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடேஷ் என்பவரின் மனைவி பச்சியம்மாள் (வயது.45) இவர் கடந்த 4ம் தேதி மாலை 5 மணிக்கு பெலமாரனஅள்ளியில் உள்ள இராஜேஸ்வரி என்பவருடைய விவசாய நிலத்தில் பசுமாட்டிற்காக தீவன புல்அறுத்து கொண்டிருந்தார்.
அப்போது விஷ பாம்பு ஒன்று அவரது சுண்டு விரலில் கடித்தது, இதையறிந்த அக்கம் பக்கத்தினர், பச்சியம்மாளை மீட்டு தர்மபுரி அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பச்சியம்மாள் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கடேஷ் இன்று மாரண்டஅள்ளி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக