தருமபுரி மாவட்டத்தில் எண்ணங்களின் சங்கமம் - NDSO மகாத்மா காந்தி மாலைநேர பயிற்சி மையத்தில் பயின்று வரும் 40 மாணவிகளுக்கு சுரபி அறக்கட்டளை மைத்ரேயி "பெண் கல்வி ஊக்குவிப்பு" திட்டத்தில் சுரபி அறக்கட்டளை நிர்வாகிகள் திரு. ராதாகிருஷ்ணன், திரு. புருசோத்தமன், திருமதி. தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு தலா ரூபாய் 2500/- மதிப்பிலான புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கினர்கள். இந்த உதவி 4வது ஆண்டாக வழங்கப்பட்டு வருகின்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அரிமா. மாணிக்கம் மாணவிகளின் எதிர்கால கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார், திருமதி. காயத்ரிபிரகாஷ் மாணவிகளின் கல்வி மற்றும் தனித்திறனை மேம்படுத்துவதற்கான அவசியம் குறித்து விளக்கினார். சுரபி அறக்கட்டளை நிர்வாகி ராதாகிருஷ்ணன் சுரபி அறக்கட்டளையின் பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் நோக்கம் செயல்பாடு மாணவிகளின் உயர் கல்வி வரையிலான தொடர் உதவிகள் குறித்தும் விளக்கினார், மாணவிகளின் தனித்திறமையை வளர்க்கவும் மேம்படுத்தவும் தொடர்ந்து தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும் மாணவிகள் கல்வி ஒழுக்கம் பண்பாடு ஆரோக்கியம் சமூக பற்று உள்ளவர்களாக மாணவிகள் வளர வேண்டும் என புருஷோத்தமன் மாணவிகளுக்கு விளக்கினார். மேலும் சுரபி அறக்கட்டளை மூலமாக ஏழ்மையான மாணவி குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கு சுய வருமானம் பெற தையல் மெஷின் வழங்கபட்டது.
நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் அறம் விதை அறக்கட்டளை திரு.முருகன், வழக்கறிஞர் திரு.முனிராஜ், திரு.மணியரசன், திரு.மூவேந்தர், திருமதி.கவிதா, திருமதி.கவிப்பிரியா, திருமதி.அம்பிகா மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட ஆடவர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை NDSO மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெ. பிரகாஷ் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக