இப்பயிற்சி வகுப்பில் ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை மூலம் இரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல். காட்டுப்பன்றி, மயில்களை கட்டுபடுத்தும் முறைகள், மீன் அமிலம் தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினர். பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானி சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்டு இரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்கும் தொழில்நுட்பபங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து பாலக்கோடு வேளாண்மை உதவி இயக்குனர் அருள்மணி விளக்கி பேசினார். வேளாண்மை அலுவலர் தேவி அவர்கள் மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் பங்கு பெறும் வழிமுறைகள் குறித்து கூறினார்.
இப்பயிற்சி முகாமில் வேளாண்மை அலுவலர் அர்சுனன், துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மாரிமுத்து கிருஷ்ணன், மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக