தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான நான்காம் காலாண்டு மற்றும் 2024-ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (24.06.2024) நடைபெற்றது.
இக்குழுகூட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு சட்டம் 2017-ன்படி பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்தும், தரமான பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் எண்ணெய் மற்றும் பருப்பு உரிய காலத்திற்குள் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கொண்டு சென்று விநியோகம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் ஜுன் 2023-மாதம் முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ இராகி வழங்கப்பட்டு வருகிறது எனவும், அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் அத்தியாவசிய பொருட்களின் ஜுலை-2024 முதல் செப்டம்பர் 2024 வரை மாதங்களுக்கான குடிமைப் பொருட்கள் தேவையின் அடிப்படையில் 100% முன் நுகர்வு செய்யப்பட வேண்டும் எனவும், தரம் மற்றும் எடையளவு சரியாக உள்ளதை உறுதி செய்ய துறை அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) திருமதி.செ.நர்மதா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி.எம்.யசோதா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் (கூ/பொ) திருமதி.எஸ்.மலர்விழி, தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளார் திருமதி.வ.தேன்மொழி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர் முனைவர்.சி.சேகர் மற்றும் தருமபுரி மாவட்ட நுகர்வோர் அமைப்பை சார்ந்த நகர ஒருங்கிணைப்பாளர் திரு.என்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக