தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடத்தூர் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றும் திருமுருகன் அவர்களைக் கண்டித்து மாபெரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவர் பெண் ஆசிரியர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுதலில் ஈடுபட்டதாகவும் மற்றும் பெரியூர் வத்தலமலை பகுதிய இயங்கி வரும் பள்ளிய மாணவிகளிடம் பாலியல் துன்புறுதலில் ஈடுபட்ட தற்காலிக ஆசிரியர் ஒருரை ஆதரிப்பதாக திருமுருகன் மேல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் காட்டும் விரோத போக்கையும் கண்டித்து கடத்தூர் வட்டார செயலாளர் சுரேஷ், தர்மபுரி மாவட்ட செயலாளர் அருள்சுந்தரம் மற்றும் சரவணன் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் மீது விரோத போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் திருமுருகன் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.
கடத்தூர் ஒன்றியத்தில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வரும் கிரு.முருகன் வட்டார கல்வி அலுவலர் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீது பொய்யாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என, அச்சுறுத்தி வரும் வட்டார கல்வி அலுவலர் திரு.முருகன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
பெரியூர்வத்தல்மலை நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தற்காலிக ஆசிரியரை காப்பாற்றும் நோக்குடன் மற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மீது பழி சுமத்தி தவறான விசாரணை அறிக்கை அளித்து, ஆசிரியர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் கண்டிக்கிறோம் கண்டிக்கின்றோம்.
பெண் ஆசிரியர்களை பாலியல் ரீதியாக துண்புறுத்துவதும், ஆண் ஆசிரியர்களை காவல்துறை மூலம் துன்புறுத்துவதை நிறுத்த கண்டிக்கின்றோம். தொடக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அவர்களையும். கடத்தூர் வட்டார செயலாளர் மற்றும் ஒன்றியத்தில் பணியாற்றும் பெண் ஆசிரியர்களை தகாத வார்த்தையில் பேசிய கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் திருமுருகன் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.
கேத்திரெட்டிபட்டிபட்டி பள்ளியில் தலைமை ஆசிரியர் மீது தொடர்ந்து விரோத போக்குடன் செயல்பாட்டு மெமோ வழங்கும் கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் திருமுருகன் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்களிடம் லஞ்சம் வாங்கும் கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் திருமுருகன் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.
தொடர்ந்து ஆசிரியர்களுக்கு எதிராக செயல்படும் வட்டார கல்வி அலுவலர் திருமுருகன் அவர்கள் மீது துறை நீதியான நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் கடத்தூர் வட்டார கிளையின் சார்பாக கண்டன. ஆர்ப்பாட்டம் என கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இவர் மீது உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக