பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி தர்மபுரி நாடாளுமன்ற மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஜூன், 2024

பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி தர்மபுரி நாடாளுமன்ற மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை.


தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் சகோதரி முனைவர் சௌமியா அன்புமணி வெற்றி பெறுவார் என்ற மிகுந்த நம்பிக்கைக்கு மாறாக வெற்றி இழப்பு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பா.ம.க மற்ற தொகுதிகளில் வெற்றி இழப்பு கவலை அளிக்கிறது. உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றி - ஜி.கே.மணி.


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் சகோதரி முனைவர் சௌமியா அன்புமணி மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்ற மிகுந்த நம்பிக்கையோடு கடுமையாக உழைத்தோம். எல்லா தரப்பினராலும் வெற்றி உறுதி என்று பேசப்பட்டது. இந்நிலையில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி இழப்பு என்பது நமக்கு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நாமும் நமது கட்சியினரும் இன்னும் சோகத்தில் இருந்து மீள முடியவில்லை. பா.ம.க போட்டியிட்ட மற்ற தொகுதிகளிலும் வெற்றி இழப்பு என்பது நமக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. தோழமைக் கட்சிகளும் வெற்றி பெறவில்லை                  


தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி தவிர்க்க முடியாத சக்தி. எல்லோரும் கடுமையாக உழைத்தார்கள். நம்முடைய உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்பது மிகப்பெரிய வேதனை. மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தும் இன்னும் கொஞ்சம் வாக்களிக்கவில்லையே என்பது நமக்கு மிகுந்த ஆதங்கத்தை வேதனையை உண்டாக்குகிறது. பொதுமக்களுக்கு நாம் நல்லதையே செய்து வருகிறோம் ஆனாலும் மக்கள் இப்படி தீர்ப்பளித்துள்ளார்கள். 


இத்தேர்தலில் கடுமையாக உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து பா.ம.க மக்கள் பணி செய்யும்...

கருத்துகள் இல்லை:

Post Top Ad