தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அத்திகுட்லஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள் (வயது- 55) இவர், ஜூன்.6, வியாழக்கிழமை, நேற்று மாலை 4 மணிக்கு, அத்திகுட்லஅள்ளி அருகில் உள்ள பி,கெட்டூர் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார், அப்போது அனுமந்தபுரத்திலிருந்து காரிமங்கலம் நோக்கி மாங்காய் லோடு ஏற்றி சென்ற டிராக்டர் பெருமாள் மீது மோதியது, இதில் பெருமாள் படுமகாயமடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக