தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துதுறை அலுவலர்களுடன் இன்று (07.06.2024) நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாகவும், நுகர்வோர் நலன் பாதுகாப்பு தொடர்பாகவும் நுகர்வோர்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தன்னார்வ நுகர்வோர் குழுக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, மனுக்களின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தினை 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. நுகர்வோர் அமைப்புகளுக்குள்ள வரையறைகளை பின்பற்றி நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த சேவைகளை மாவட்ட நிர்வாகத்துடன் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான அரசு திட்டங்களின் செயலாக்கத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு நல்கி ஒருங்கிணைப்பு பணிகளை திறம்பட செயல்ப்படுத்த தெரிவிக்கப்பட்டது.
அடுத்த மூன்றாம் காலாண்டு கூட்டம் செப்டம்பர் மாதம் நடைபெறும் என இக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திருமதி.செ.நர்மதா (பொறுப்பு), மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திருமதி.வ.தேன்மொழி, கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் திரு.பெ அன்பழகன், மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புச் சங்க தலைவர் திரு.கே.எம்.அண்ணாமலை, பென்னாகரம் வட்ட சுற்றுசூழல் சங்கத் தலைவர் திரு.ஆர்.சம்பத்குமார், தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு மகளிர் சங்கத் தலைவர் திருமதி. சி.மீனாட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக