வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தருமபுரியை சேர்ந்த இளைஞர் புற்றுநோய் பாதித்து சிகிச்சையில் உள்ளார். அவரது சிகிச்சைக்கு தட்டணுக்கள் தேவைப்பட்டதை அறிந்து தருமபுரியிலிருந்து மை தருமபுரி அமைப்பினர் வேலூர் சென்று தட்டணுக்கள் தானம் வழங்கினர்.
இது குறித்து மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா அவர்கள் கூறுகையில் நான் 89 முறையாக தட்டணுக்கள் தானம் வழங்கியுள்ளேன், சமூக சேவகர் அருணாசலம் அவர்கள் 24 ஆவது முறையாகவும், சமூக சேவகர் ஆதிமூலம் அவர்கள் 5 ஆவது முறையாகவும் தட்டணுக்கள் தானம் வழங்கியுள்ளார், புற்றுநோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தட்டணுகள் தனமாக வழங்க அனைவரும் முன்வர வேண்டும் என அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக