கொம்மநாயக்கன அள்ளி கிராமத்தில் பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 ஜூன், 2024

கொம்மநாயக்கன அள்ளி கிராமத்தில் பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள கொம்மநாயக்கனஅள்ளி கிராமத்தில்,  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் பாலக்கோடு டி. எஸ்.பி சிந்து அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பி.செட்டி அள்ளி ஊராட்சிமன்ற தலைவர் கணபதி, பாலக்கோடு காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.


தர்மபுரியிலிருந்து பெங்களுரு வரை புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தர்மபுரியிலிருந்து  இராயக்கோட்டை வரை சாலை அமைக்கும் பணி முடிவடைந்ததையொட்டி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.


தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தும் போது முறையாக பயன்படுத்தாமல்  விரைவாக செல்வதற்காக சர்வீஸ் சாலை வழியாக எதிர் திசையில் சென்று வருகின்றனர்.


இதனால் பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில், ஏற்படும் தொடர் விபத்துக்களால்  உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது, எனவே தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் பாலக்கோடு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முகற் கட்டமாக பாலக்கோடு அடுத்துள்ள கொம்மநாயக்கனஅள்ளி கிராமத்தில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.


இக்கூட்டத்திற்க்கு  டி.எஸ்.பி சிந்து அவர்கள் தலைமை வகித்து பேசியதாவது, விரைவில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சாலையின் எதிர் திசையில் செல்லக் கூடாது, இரு சக்கர வாகன ஓட்டிகள்  சாலையின் நடுவே செல்லாமல், சாலையோரம் உள்ள வெள்ளை கோட்டிற்க்குள் செல்வது பாதுகாப்பானது.


மேலும் ஹெல்மெட் அணியாமலும், குடித்துவிட்டும், செல்போனில் பேசியபடியும், அஜக்கிரதையாக  செல்வதால், ஏற்படும் விபத்துக்களால், ஒழுங்காக சாலையில் செல்வோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


இக்கூட்டத்தில் பாலக்கோடு போலீசார், மற்றும் பாறையூர், கொம்மநாயக்கனஅள்ளி, தீத்தாரஅள்ளி கிராமங்களை  சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad